அன்புடையீர்,

நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 29 ம் தேதி ( 29.04.2018) அன்று தமிழ் கலை விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
Venue : SAALBAU Titus Forum (Nordwest Zentrum), Walter – Möller – Platz 2, 60439, Frankfurt.
Date : Sunday, 29th April 2018
Time : 15:30 to 20:00 Hrs


Time : 15:30 to 20:00 Hrs

இந்நிகழ்ச்சியின் மூலம், ஜெர்மனியில் வாழும் நமது இளைய தலைமுறைக்கும், இந்நாட்டவருக்கும் நமது கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் வருகையை கீழ்கண்ட முகவரியில் சென்று உறுதி செய்யவும்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக “மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக்கலைக்” குழுவினரைக்கொண்டு கீழ்கண்ட கலைகளுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தவிருக்கின்றோம்.
இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் விருப்பத்தை, கீழ்கண்ட கூகிள் விண்ணப்பப்படிவத்தில் 05.04.2018 ஆம் தேதிக்குள் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூகிள் விண்ணப்பப்படிவம்:https://goo.gl/forms/VfNLKMY8xkotrA0M2

நாட்டுப்புற நடனங்கள்: (கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பறையாட்டம், மயிலாட்டம் மற்றும் மரக்கால் ஆட்டம்):

— சிறார்கள் (6 வயதிற்கு மேற்பட்டவர்கள்) முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
— மேடையில் நடனமாட விருப்பமில்லாதவர்கள், பயிற்சி வகுப்புகளில் மட்டும் பங்கு கொள்ளலாம்.
— அனைத்து பயிற்சி வகுப்புகளும் 13.04.2018 ஆம் தேதியிலிருந்து நிகழ்ச்சியின் நாள் வரை (29.04.2018) நடத்தப்படும்.
— வார நாட்களில் மாலை வேலைகளிலும் , வார இறுதி நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
— பயிற்சிக்கான கட்டணம் , உடைகள் மற்றும் ஆபரணங்களுக்கான கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
— பயிற்சிக்கான இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

நாட்டுப்புறப் பாடல்கள்:

— சிறார்கள் (6 வயதிற்கு மேற்பட்டவர்கள்) முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
— மேடையில் பாட விருப்பமில்லாதவர்கள், பயிற்சி வகுப்புகளில் மட்டும் பங்கு கொள்ளலாம்.
— அனைத்து பயிற்சி வகுப்புகளும் 18.04.2018 ஆம் தேதியிலிருந்து நிகழ்ச்சியின் நாள் வரை (29.04.2018) நடத்தப்படும்.
— வார நாட்களில் மாலை வேலைகளிலும் , வார இறுதி நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
— பயிற்சிக்கான கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
— பயிற்சிக்கான இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சங்க உறுப்பினர்கள் பயிற்றுவிக்கும் கலை நிகழ்ச்சிகள் (Classical / Semi Classical dances):

— நமது சங்கத்தின் உறுப்பினர்களில் திறமையான நடன ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
— சிறார்கள் (6 வயதிற்கு மேற்பட்டவர்கள்) முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
— அனைத்து பயிற்சி வகுப்புகளும் 03.04.2018 ஆம் தேதியிலிருந்து நிகழ்ச்சியின் நாள் வரை (29.04.2018) நடத்தப்படும்.
— வார நாட்களில் மாலை வேலைகளிலும் , வார இறுதி நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
— பயிற்சிக்கான கட்டணம் இலவசம்.
— உடைகள் மற்றும் ஆபரணங்களுக்கான கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
— பயிற்சிக்கான இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மற்ற கலைகள்:

உங்களிடம் மற்ற திறமைகள் இருந்தால், எங்களிடம் தெரியப்படுத்தவும் , நாங்கள் உங்களுக்கு இந்த நிகழ்ச்சி அல்லது மற்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தித்தர கடமைப்பட்டிருக்கிறோம்.
இம்மாபெரும் கலைத் திருவிழாவிற்க்கு வருகை புரிந்து, நிகழ்ச்சியினை கண்டு ரசித்து, சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் விவரங்களுக்கு, info@frankfurttamilsangam.com தொடர்பு கொள்ளவும்.

– நன்றி !

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்

இங்கனம்
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்

Frankfurt Tamil Sangam e.V
www.frankfurttamilsangam.com
Email: info@frankfurttamilsangam.com

FTS Bank Account Details : Kontoinhaber: FRANKFURT TAMIL SANGAM e.V BLZ: 50190000 Konto Nr.: 6200924930 IBAN : DE55501900006200924930 BIC: FFVBDEFF BANK: Frankfurter Volksbank, Eschborn

Top