அன்புடையீர் வணக்கம்,

பிராங்பேர்ட் மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் வாழும் தமிழ் நெஞ்சங்களை இனைத்து வணிகநோக்கில்லா கூட்டமைப்பு ஒன்று உருவாக்கும் எண்ணத்துடன் „பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்“  என தொடங்கப்படவுள்ளது.

கீழே கண்டவை இச்சங்கத்தின் குறிக்கோள்களாக முன் வைக்கப்படுகின்றன :

  • தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றைப் போற்றிப் புகழவும், பேணிக் காக்கவும், அவற்றை வாழும் நெறியாக அன்றாடம் கடைப்பிடிக்கவும் பாடுபடும்.
  • பிராங்பேர்ட் நகரிலும் அதன் அருகாமையிலும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்காக சமூகக் கூட்டங்கள் நடத்த பாடுபடும் .
  • தமிழ்க் கல்வி, இலக்கியம்,நூல்கள், இசை மற்றும் நாடகம் போன்றவை கிடைத்திட வழிவகுக்கும்.
  • புதிதாக வரும் தமிழ் அன்பர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் உதவிடும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

இச்சங்கம் தற்பொழுது பிராங்பேர்ட் நகரில் „Verein“ என்ற முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தொடக்க கால உறுப்பினர்களாக சுமார் 500 பேர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள், தனிநபர் மற்றும் மாணவர்கள் என்ற நிலையில் சேர்ந்துள்ளனர். ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் அதற்கு உறுதுணையாக எட்டு நபர்கள் கொண்ட செயற்குழுவும் இச்சங்கத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.


English :

Objectives of the Association:

  1. To provide a communal gathering for Tamil speaking people living in and around Frankfurt, Germany.
  2. To praise and practice the Culture, Tradition and Heritage of Tamil Language, Literature, History and its People.
  3. To provide means of Tamil education.
  4. To provide help for its members, newcomers and Students from India in integration.
  5. To provide means for Famous Tamil Books, Literature Works, Films etc.
  6. To demonstrate and live the slogans:

“Live Tamil! Grow Tamil!”

About the Current Activities:

  1. The association is currently being registered as a registered “Verein” in Frankfurt.
  2. The association consists as of now close to 500 provisional members from which a team of 13 represent the Board(5 Members) and Executive Committee(8 Members).
  3. The members are mix of families with children, individuals and students.