கொரோனா நிவாரண நிதி திரட்டல் வேண்டுகோள்

ஜெர்மனி: 17-05-2021

அன்புடையீர்,

கொரோனா 2-ம் அலையானது தமிழகத்தில் அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு உடனடி தேவையான நிவாரண உதவிகளை வழங்க முன்வருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுடனும் மற்றும் உறுப்பினர் அல்லாத நண்பர்களுடனும் இணைந்து வேண்டிய நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

திரட்டப்படும் நிதி பின்வரும் ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தப்படும். 

  • ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வழங்குதல்
  • தமிழக அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் (மருந்துகள், பிற உதவிகள் போன்றவற்றின் தேவை தினமும் விரைவாக அதிகரித்து வருகிறது)
  • தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குதல்

தங்களின் நன்கொடையை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தவும்.

FTS Bank Account Details:

Kontoinhaber: Frankfurt Tamil Sangam e. V

BLZ: 50190000 Konto Nr.: 6200924930 BIC: FFVBDEFF

IBAN: DE55501900006200924930

BANK: Frankfurter Volksbank, Eschborn

Use the remark text in your transfer description:

குறிப்பு:

  • நமது தமிழ் சங்கத்தின் வங்கி கணக்கில் இருந்தும் ஒரு சிறுதொகையை நிவாரண நிதியாக வழங்கிட பரிசீலித்து வருகிறோம்
  • வரிச்சலுகைக்கான நன்கொடை ரசீது தேவைப்படும் அன்பர்களுக்கு வழங்கப்படும்..
  • இது தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையோடு தெரிவிக்கப்படும் மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது  கருத்துக்களோ இருக்குமெனில் எங்களை info@frankfurttamilsangam.com வழியாக தொடர்பு கொள்ளவும்.

தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு நிதி பயன்பாடு இரு கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து தங்களின் நிதி உதவியை பின்வரும் தேதிக்குள் செலுத்துமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

முதல் கட்டம்: 21.05.2021

இரண்டாம் கட்டம்: 31.05.2021 

இப்படிக்கு,

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்